PUBLISHED ON : செப் 05, 2026

மதுரை, கேப்ரன்ஹால் உயர்நிலைப் பள்ளியில், 1971-ல், 5ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியையாக இருந்த அமர்ஜோதி, மிகவும், இனிமையானவர். எளிதாக புரிந்துகொள்ள ஏற்ற வகையில், பாடங்களை சுவாரசியமாக நடத்துவார்.
சுமாராக படிக்கும் இயல்புடையவள் நான். மனப்பாடப் பகுதிகளில் கவனம் செலுத்தி படித்து உடனே ஒப்பித்து விடுவேன். ஆனால், தேர்வில் குறைவான மதிப்பெண் தான் பெற்று வந்தேன். இதை கவனித்து, 'படிக்கும் பாடங்களை, அவ்வப்போது எழுதியும் பார்க்க வேண்டும்; அப்போது தான் மனதில் பதியும்...' என்று அறிவுரைத்தார், வகுப்பாசிரியை.
அதன்படி, முயற்சி செய்தேன். படிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினேன். வகுப்பில் முதல் பரிசாக, 'அட்லஸ்' என்ற உலக வரைபட புத்தகத்தை, வகுப்பாசிரியை கையால் பெற்றேன். அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
இப்போது என் வயது, 60. இல்லத்தரசியாக இருக்கிறேன். கல்வியில் உயர நல்வழிகாட்டிய வகுப்பாசிரியை அமர்ஜோதியை போற்றுகிறேன்.
- ரா.மாலதி, மதுரை.
தொடர்புக்கு: 97913 92181
