PUBLISHED ON : செப் 19, 2026

ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1980-ல், 10-ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
அன்று காலை, 9:00 மணிக்கு பிறகும், எங்கள் வகுப்பறை கதவு திறக்கப்படவில்லை. அதற்கு உரிய சாவியை வைத்திருக்கும், அலுவலக ஊழியர் ரங்கசாமி, பள்ளிக்கு வரவில்லை. அனைவரும் வெளியே நின்றிருந்தோம்.
ஆர்வத்தால் என் சைக்கிள் சாவியை, வகுப்பறை பூட்டில் நுழைத்து திருகினேன். அடுத்த வினாடியே அது திறந்து கொண்டது.
அப்போது, அங்கு வந்த வகுப்பாசிரி யர் சீனிவாசன், என்னை தனியாக அழைத்து, 'இது மாதிரி பூட்டைத் திறப்பது, கிரிமினல் குற்றம். நீ விபரமில்லாமல் செய்து விட்டாய்...
'அதனால் யாரும் பெரிதுபடுத்தவில்லை. இதுபோல, இனி எந்த சந்தர்ப்பத்திலும் செய்து விடாதே...' என்று அறிவுரைத்து, அனுப்பி வைத்தார்.
எனக்கு, 60 வயதாகிறது. நுாற்பு ஆலையில் பணி செய்து வருகிறேன். இளமைப் பருவத்தில், ஆர்வக்கோளாறால் செய்த தவறை மன்னித்து, மனதில் புரியும்படி புத்திமதி கூறி, திருந்த வழிகாட்டிய பள்ளி வகுப்பாசிரியர் சீனிவாசனை வணங்குகிறேன்.
- கே.ஆர்.அசோகன், ஈரோடு. தொடர்புக்கு: 99424 45508
