தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புலால் மறுப்பு!

புலால் மறுப்பு!

புலால் மறுப்பு!


PUBLISHED ON : ஜூன் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில், 1975ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது வேதியியலை விருப்ப பாடமாக தேர்வு செய்திருந்தேன். வகுப்பாசிரியர் எம்.சிவதாணு பிள்ளையே வேதியியல் பாடமும் நடத்தினார். கம்பீரமாக தோற்றமளிப்பார். கடைசி பெஞ்சு மாணவர்களையும் கவனத்தில் கொண்டு கற்பிப்பார்.

மாலை வேளையில் ஆங்கிலம், கணிதம், தமிழ் இலக்கண வகுப்புகளை கூடுதலாக நடத்துவார். ஆங்கில இலக்கண சந்தேகங்களை இவரிடமே கேட்டு தெளிவு பெறுவோம்.

அவ்வப்போது வள்ளலாரின் சன்மார்க்க நெறியையும் போதிப்பார். அன்று, 'மனிதனோ, மிருகமோ இறப்புக்கு பிறகு கொண்டு செல்லுமிடம் சவக்குழி, இடுகாடு... அதுபோல் இறந்தவற்றின் மாமிசத்தை உண்ணும் மனித வயிறும் இடுகாடுதானே...' என எடுத்துரைத்தார். அது புலால் மறுப்பை பின்பற்ற வைத்தது.

என் வயது 67; போக்குவரத்து துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். புலால் உணவு தவிர்த்து நலமுடன் வாழ்கிறேன். அதற்கு அடித்தளமிட்டு, 87ம் வயதிலும் ஆரோக்கியமுடன் வாழ்ந்து வரும் ஆசிரியர் எம்.சிவதாணு பிள்ளையை வணங்கி மகிழ்கிறேன்.

- கோவி.திருநாயகம், கடலுார்.தொடர்புக்கு: 90421 63037

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us