PUBLISHED ON : ஜூலை 04, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்!
துண்டாக்கிய புளியங்காய் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 1
தேக்கரண்டி பூண்டு, சீரகம்,
பெருங்காயத் துாள், எண்ணெய் - சிறிதளவு
கருவேப்பிலை, தண்ணீர், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் சூடானதும், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின், துண்டாக்கிய புளியங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும், சீரகம், உப்பு, தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வித்தியாசமான சுவையுள்ள, 'புளியங்காய் துவையல்!' தயார். தயிர் சாதம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ஹரிணி ஞானசம்பந்தம், சென்னை.
