தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/லட்சியம்!

லட்சியம்!

லட்சியம்!


PUBLISHED ON : அக் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ரசு பெண்கள் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தாள் மாதவி. படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்தாள்.

அன்று வகுப்பாசிரியை மணிமேகலை, ''எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்...'' என, மாணவியரிடம் கேட்டார்.

வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி, ''மருத்துவம் படித்து, மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்...'' என்றாள்.

எல்லா மாணவியரும் விருப்பத்தை மளமளவென கூறினர். ஆனால், மாதவி மட்டும் விழித்தபடி, ''எனக்கு இந்த வகுப்பை பாஸ் செய்தாலே போதும் டீச்சர். அதற்கு மேல் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் பெற்றோர்...'' என, சோகத்துடன் கூறினாள்.

இதைக் கேட்ட மாணவியர் கிண்டலாக சிரித்தனர்.

கோபத்தில், ''ஏன் சிரிக்கிறீர்... ஒருவரின் கஷ்டத்தை அறிந்தால், உதவி செய்ய முன்வர வேண்டும்; கிண்டல் செய்யக் கூடாது...'' என, கண்டித்த ஆசிரியை, மாதவியை தேற்றினார்.

பின், மாதவியின் பெற்றோரை சந்தித்தார், வகுப்பாசிரியை.

மாதவியின் குடும்பம் அன்றாடம் உணவுக்கே கஷ்டப்படுவதைக் கண்டார். அந்த குடும்பத்துக்கு உதவும் பொருட்டு, மாதவியை அரசு விடுதியில் சேர்த்து விட்டார். படிப்பு செலவு முழுவதையும் ஏற்று, தன்னம்பிக்கை ஊட்டி பயிற்சி கொடுத்து ஊக்குவித்தார், ஆசிரியை.

இதனால், உற்சாகமானாள், மாதவி. படிப்பில் தீவிரம் காட்டதுவங்கினாள். வகுப்பில் பின்தங்கிய நிலையில் இருந்தவள், வேகமாக முன்னேறி, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவியருடன் சேர்ந்தாள். பொதுதேர்வில், 480 மதிப்பெண்கள் வாங்கி சாதித்தாள்.

தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி படிப்புகளை முடித்து, ஆசிரியை பணியில் சேர்ந்தாள், மாதவி.

அனைத்துக்கும் விதை போட்ட ஆசிரியை மணிமேகலையை நினைவில் கொண்டாள். அவரைப் போல, ஏழை, மாணவ - மாணவியருக்கு உதவி செய்ய உறுதி எடுத்தாள் மாதவி.

பட்டூஸ்... நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால், உயர்ந்த லட்சியத்தை அடைய முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us