தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சமையலும் படிப்பும்

சமையலும் படிப்பும்

சமையலும் படிப்பும்


PUBLISHED ON : ஆக 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2008ல், 10ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியையாக இருந்த ராமலட்சுமி, மாணவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர். பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடக்கும். அவற்றில் நான் பங்கேற்பதில்லை.

அந்த நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சமையல் வேலை செய்து, குடும்பத்துக்கு உதவியாக இருப்பேன். சிறப்பு வகுப்புக்கு செல்லாததால், கண்டித்த ஆசிரியர்களுக்கு பயந்து, 'பள்ளிக்கு செல்ல மாட்டேன்...' என, முழுநேரமும் சமையல் பணிக்கு சென்று விட்டேன்.

பள்ளிக்கு வராததை அறிந்ததும், அலுவலர் நாராயணனை என் வீட்டிற்கு அனுப்பி, என்னை அழைத்து வந்து, 'நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறாய். பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்றலாம். அதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்...' என்ற தலைமை ஆசிரியையின் அறிவுரையை ஏற்றேன். நன்றாக படித்து தேர்ச்சி பெற்றேன்.

தற்போது, என் வயது 34. தமிழக காவல் துறையில், தலைமை காவலராக பணிபுரிகிறேன். பள்ளியில் படித்த காலத்தில் என் அறியாமை போக்கி, உயர்வுக்கு ஊக்கம் தந்த தலைமை ஆசிரியை ராமலட்சுமி மாண்பை போற்றி வணங்குகிறேன்.



- சே.முத்துசாமி, துாத்துக்குடி.

தொடர்புக்கு:- 82485 81491


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us