PUBLISHED ON : ஜூன் 27, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 250 கிராம்
புட்டு மாவு - 250 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை, நெய் - தலா 4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்க்கவும். புட்டு மாவுடன் சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து வேக வைத்து உதிர்த்த, சர்க்கரைவள்ளி கிழங்குடன் கலக்கவும். இதில், தேங்காய் துருவல், சர்க்கரை, நெய் சேர்க்கவும்.
சுவைமிக்க, 'சர்க்கரைவள்ளிக் கிழங்கு புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- என்.அனிதா, மதுரை.
