PUBLISHED ON : நவ 21, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
வெல்லப்பொடி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - அரை கப்
உளுந்தம்
பருப்பு - 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய தேங்காய் - கால் கப்
ஏலக்காய் துாள்,
நெய், சுக்குத்துாள், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பு ழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து மாவாக்கி சேர்க்கவும். இதில், ஏலக்காய் துாள், சுக்கு துாள், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை கலக்கவும். வெல்லத்துாளை, தண்ணீரில் கலந்து, கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, இதில் ஊற்றி பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
சத்துகள் நிறைந்த சுவையான, 'சத்து மாவு உருண்டை' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- வ.பரமேஸ்வரி, திருவள்ளூர்.
