தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நல்வழி!

நல்வழி!

நல்வழி!


PUBLISHED ON : அக் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பேரூராட்சி நடுநிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியராக இருந்த கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பாடங்களை கற்பிப்பதுடன், அன்றாடம் முக்கிய நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுவார். அறிவூட்டும் கதைகளால் உற்சாகப்படுத்துவார். அது நற்சிந்தனையை வளர்த்தது.

கோபி பகுதியில் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் போன்றோரின் ஆன்மிக செ ாற்பொழிவுகள் நடப்பது வழ க்கம். அவற்றை கேட்கும் வகையில், 10 கி.மீ., துாரத்துக்கு மிதிவண்டியிலே என்னை அழைத்து செல்வார் கணித ஆசிரியர். கள்ளிப்பட்டியில் நடந்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழாக்களுக்கும் அழைத்துச் சென்று ஆர்வம் ஊட்டினார். தொடர்ந்து ஆன்மிக, இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பள்ளி படிப்பை முடித்து, பயிற்சி பெற்று ஆசிரியராக அக்., 26, 1970ல் பணியில் சேர்ந்தேன். என் கணித ஆசிரியரே அந்த பள்ளி தலைமையாசிரியராக பொறுப்பு வகித்தது மகிழ்ச்சி தந்தது. பள்ளியில் விழாக்கள் நடத்துவது, பதிவேடு பராமரிப்பு, தனித்திறன் ஊக்குவிப்பு, சுற்றுலா என, செயல்பாடுகளில் தக்க பயிற்சி தந்தது நல்வாய்ப்பாக அமைந்தது.

கணித ஆசிரியரிடம் பெற்ற வழிகாட்டுதலால் என் மாணவர்களுக்கு தி.ஜ.ரா., எழுதிய காந்தி மகான் வரலாற்றை சுவையாக சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். சிறப்பாக பணியாற்றி தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றேன்.

எனக்கு 76 வயதாகிறது. பணி ஓய்வு பெற்ற பின், ஆன்மிக செய ல்பாடுகளில் ஈடுபட்டு மனநிறைவுடன் வாழ்கிறேன். இதற்கு பள்ளியில் படித்த காலத்திலே நல்வழி காட்டிய, கணித ஆசிரியர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை போற்றுகிறேன்.

- கொ.வெங்கடசாமி, ஈரோடு. தொடர்புக்கு: 73395 90398

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us