தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உன்னத தருணம்!

உன்னத தருணம்!

உன்னத தருணம்!


PUBLISHED ON : அக் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அரசு போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1970ல், எஸ் .எஸ்.எல்.சி., படித்த போது, கணிதத்தை விருப்ப பாடமாக எடுத்திருந்தேன். அதில், அல்ஜீப்ரா மிகவும் கடினம் என பயமுறுத்தினர், சக மாணவர்கள்.

செய்வதறியாது திகைத்தி ருந்தேன். அப்போது கணித ஆசிரியர் ஏ.கே.எஸ்., என்ற ஏ.கே.சுப்பிரமணியன் தைரியம் ஊட்டி, எளிமையாக புரியும் வகையில் கற்பித்தார். கணிதம், சுலப பாடமானது.

பொதுத்தேர்வுக்கு, 40 நாட்கள் முன், ஒவ்வொரு வாரமும் தேர்வுகள் நடத்தி பயிற்சி தந்தார் கணித ஆசிரியர். இதனால், பயமின்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவனாக புகழ் பெற்றேன். மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசில் சுலபமாக பணி வாய்ப்பும் கிடைத்தது.

என் வயது, 72; மத்திய தபால், தந்தி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கவனமாக கற்பித்து முன்னேற வழிகாட்டிய, கணித ஆசி ரியர் ஏ.கே.சுப்பிர மணியனை, 55 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் சந்தித்தேன். என்னை வரவேற்று, கைகளை பற்றிய போது இனம்புரியாத பாசத்தை உணர்ந்தேன். வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாக அதை கருதி மகிழ்கிறேன்.

- அ.சுகுமார், திருவண்ணாமலை. தொடர்புக்கு: 94861 03972

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us