தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முயற்சியே வழி!

முயற்சியே வழி!

முயற்சியே வழி!


PUBLISHED ON : அக் 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி அரசு உயர்நிலை பள்ளியில், 1969ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். வகுப்பாசிரியையாக இருந்த ராஜலட்சுமி, தமிழ் பாடத்தை அருமையாக கற்றுத் தந்து நம்பிக்கையூட்டினார்.

அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நான், கணிதத்தில் மட்டும் பின் தங்கியிருந்தேன். கல்லுாரியில் படித்து வந்த என் சகோதரர் சுப்ரமணிய பிள்ளை, அன்றாடம் மாலையில் அக்கம் பக்கத்து மாணவ - மாணவியருக்கு கணக்கு பாடத்தில், 'டியூஷன்' கற்பித்து வந்தார்.

எனக்கும் கற்றுத்தர கேட்டேன். உடனே மறுத்து, 'உன் திறமை மீது நம்பிக்கை இருந்தால், முயற்சி செய்து படி...' என, பதிலுரைத்தார். அதை சவாலாக ஏற்று படித்தேன். பொதுத்தேர்வில் கணிதத்தில், 98 மதிப்பெண்கள் வாங்கி பாராட்டு பெற்றேன்.

பள்ளி படிப்பை முடித்த பின், கன்னியாகுமரி குருகுலத்தில் கணக்கராக பணியில் சேர்ந்தேன். அங்கு சிவராம கிருஷ்ணய்யர் என்பவர், பூஜை செய்வார். தவறாமல் அதில் கலந்து கொள்வேன். என் ஆர்வத்தை கண்டு, சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்று தந்தார். தொடர்ந்து கற்றதால் சுப நிகழ்ச்சிகளில் தனியாக பூஜை செய்யும் திறமையை பெற்றேன்.

என் வயது, 73. இல்லத்தரசியாக இருக்கிறேன். வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்திய தமிழாசிரியை ராஜலட்சுமி, சகோதரர் சுப்ரமணிய பிள்ளை மற்றும் சமஸ்கிருதம் கற்பித்த சிவராம கிருஷ்ணய்யரை நன்றியுடன் வணங்குகிறேன்.

- ராதா நடராஜன், சென்னை.

தொடர்புக்கு: 97898 08603

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us