தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தனித்துவ பயிற்சி!

தனித்துவ பயிற்சி!

தனித்துவ பயிற்சி!


PUBLISHED ON : அக் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, ஒப்பண்ணக்கார தெரு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில், 2002ல், 6ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். அதற்கு முன் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் கற்றிருந்த எனக்கு தமிழ் மொழி எழுத வாசிக்க இயலவில்லை. இதனால் கடும் கண்டிப்புக்கு உள்ளானேன். சுத்தமாக தமிழ் மொழி தெரியாததால் வகுப்பறையில் திணறிக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை.

என் வீட்டருகே வசித்த ஆசிரியை அனு, தனியாக டியூஷன் வகுப்பு நடத்தி வந்தார். அவரை அணுகி, என் குறையை நிவர்த்திக்கக் கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியுடன், 'அ' என்ற உயிர் எழுத்தில் தொடங்கி, படிப்படியாக எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தந்தார். காலம், நேரம் பார்க்காமல் உதாரணங்களை முன்வைத்து கற்பித்தார். கவனமுடன் படித்தேன். அதன் விளைவாக 10ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி அளவில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றேன். தொடர்ந்து படித்து எம்.பில்., ஆய்வு பட்டமும் பெற்றேன்.

என் வயது 34. இல்லத்தரசியாக இருக்கிறேன். தனித்துவத்துடன் தமிழ் மொழியை பயிற்றுவித்த ஆசிரியை அனுவை போற்றுகிறேன்.



- பி.அமுதா, கோவை.

தொடர்புக்கு: 82706 79013

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us