தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!


PUBLISHED ON : நவ 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...

வகுப்பில் அமைதியாக இருக்கும் நான், பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுவேன். ஆசிரியர் கேள்வி கேட்டால் அச்சத்துடன் தலையை குனிந்து கொள்வேன். முடியாது என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி இருந்தது.

வணிகவியல் ஆசிரியராக இருந்த சண்முக சுந்தரம், அன்று கட்டுரை எழுத கூறினார். அனைவரும் எழுதத் தொடங்கினர். நான் வெறுமையாகத் தாளை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே வந்து விசாரித்தவரிடம் சற்று தயக்கத்துடன், 'எழுத வராது சார்...' என்றேன்.

என் தாளை புரட்டியபடி, 'முதலில் எழுதத் தொடங்கு. தவறு இருந்தால் திருத்துகிறேன்...' என அறிவுரைத்தார். சிறியதாக எழுதிக் கொடுத்தேன்.

அதில் இருந்த நல்ல அம்சங்களை சுட்டிக்காட்டி, 'உன்னிடம் திறமை இருக்கிறது. அதை நீ நம்பவில்லை; அது தான் உனக்குள் இருக்கும் பிரச்னை...' என உணர்வூட்டும் வகையில் கூறினார், வணிகவியல் ஆசிரியர். அது, வாழ்வில் பெருந்திருப்பமாக அமைந்தது.

முயற்சி செய்து எழுதத் தொடங்கினேன். பள்ளி விழாக்களில் பங்கேற்று மேடையில் பேசினேன்; கூச்சம் மறைந்தது. கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற போது, 'இதெல்லாம் உங்களால் தான் சார்...' என, நன்றி பெருக்குடன் கூறினேன். சிரித்தபடியே, 'நான் கதவைத் திறந்து வைத்தேன். உள்ளே நுழைந்தது நீ தானே...' என நெகிழ்ந்து பாராட்டினார்.

எனக்கு 62 வயதாகிறது. தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். படிப்பு மற்றும் செயல்களின் மீது நம்பிக்கை கொள்ள ஊக்கமளித்து, வழிமுறைகளை கற்றுத்தந்த வணிகவியல் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை போற்றுகிறேன். என் வெற்றிகளை அவரது பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

- பெ.வை.சே.கணேஷ் சுப்பிரமணி, தேனி. தொடர்புக்கு: 99428 72466

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us