தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அடக்கம்!

அடக்கம்!

அடக்கம்!


PUBLISHED ON : நவ 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் ஆரம்பப் பள்ளியில், 1950ல், 3ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியராக இருந்தார் விஸ்வநாதன். வெண்மை நிற முழுக்கை ஜிப்பாவுடன், வேஷ்டி அணிந்து கம்பீரமாக காட்சி தருவார். பாடங்களை தெளிவாக, புரியும்படி விளக்குவார்.

அன்றைய வகுப்பில், ஒழுக்கத்தின் மேன்மையை எடுத்து கூறினார். அடக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ‘மாணவப் பருவத்தில், 18 வயது வரை அடக்கத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம். அதனால், வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். அடக்கமில்லாவிட்டால், பிறரால் அடக்கி ஆளும் நிலைக்கு தள்ளப்படுவோம். அதாவது, பிறருக்கு அடிமையாகி விட வாய்ப்பு ஏற்படும்...’ என தெளிவுபடுத்தினார், வகுப்பாசிரியர்.

பள்ளி, கல்லுாரி படிப்பு காலத்தில் அதை மனதில் வைத்து செயல்பட்டேன். அடக்கம் என்ற அரிய பண்பை புரிந்து முன்னேறினேன்.

தற்போது என் வயது, 84; தமிழக நெடுஞ்சாலைத் துறையில், இணை தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் வகுப்பாசிரியர் விஸ்வநாதனிடம் பெற்ற அறிவுரையை பின்பற்றி, அமைதியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

- கே.ராமன், சிவகங்கை.

தொடர்புக்கு: 94881 53595

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us