தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தகுதிக்கு மரியாதை!

தகுதிக்கு மரியாதை!

தகுதிக்கு மரியாதை!


PUBLISHED ON : நவ 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, மதுரா கல்லுாரி மேல்நிலை பள்ளியில், 1985ல், 11ம் வகுப்பு சேர்ந்த போது நடந்த சம்பவம்...

பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித தேர்வுக்கு முந்தைய நாள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இதனால், கவனம் செலுத்தி தேர்வை எழுத இயலவில்லை. கணிதம் தவிர எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன்.

இதனால், 11ம் வகுப்பில் கணிதத்தை முதன்மை பாடமாக உடைய, முதல் குரூப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. என் அப்பா, பல்வேறு சிபாரிசுகள் வழியாக முயற்சி செய்தார். எதற்கும் நிர்வாகம் இணங்கவில்லை. வேறுவழியின்றி உயிரியலை முதன்மையாக உடைய, இரண்டாம் குரூப்பில் சேர்ந்தேன்.

அதில் இயற்பியலில் கணிதம் தொடர்பாக வரும் கேள்விகளுக்கு, துரிதமாக விடை அளித்து வந்தேன். இதை கவனித்த இயற்பியல் ஆசிரியர் எம்.கிருஷ்ணன், என் நிலையை விசாரித்தார். பாதிக்கப்பட்ட விதம் குறித்து தெரிவித்து, ‘முதல் குரூப்பில் சேர வாய்ப்பு கொடுத்தால் நன்றாக படிப்பேன்...’ என உறுதியளித்தேன்.

உடனே, தலைமையாசிரியரிடம் அழைத்து சென்று பரிந்துரைத்தார் இயற்பியல் ஆசிரியர். சில கேள்விகள் கேட்டு, என் பதில்களால் திருப்தியடைந்து முதல் குரூப்பில் சேர வாய்ப்பளித்தார், தலைமையாசிரியர்.

சிறப்பாக படித்து கல்லுாரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெற்றேன். அரசு பணி நியமன ஆணை பெற்றதும், இயற்பியல் ஆசிரியரை தேடி, அவரது இல்லம் சென்று, மலர்மாலை அணிவித்து, அவரின் பாதங்களில் பணிந்து ஆசி பெற்றேன்.

என் வயது, 56; தொலை தொடர்பு துறையில். துணை கோட்ட பொறியாளராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றேன். தகுதிக்கு மதிப்பளித்து, வாழ்வில் உயர துணை புரிந்த இயற்பியல் ஆசிரியர் எம்.கிருஷ்ணனை வணங்கி மகிழ்கிறேன்.

- ஆர்.சந்திரசேகரன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us