தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாலும், பரிவும்!

பாலும், பரிவும்!

பாலும், பரிவும்!


PUBLISHED ON : நவ 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, கதீட்ரல் உயர்நிலை பள்ளியில், 1961ல், 7ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். பள்ளி விடுதியில் தங்கி, வகுப்புக்கு சென்று வந்தேன். வார்டன் பொறுப்பு வகித்த திரவியம், வகுப்பாசிரியராகவும் இருந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த என் அம்மா, நான் பள்ளியில் சேர்ந்த சில மாதங்களில் இறந்தார். தாங்க முடியாத சோகத்தால் சரியாக உண்ணாமல், உடல் சோர்வுற்று மெலிந்து இருந்தேன்.

இதைக்கண்ட வகுப்பாசிரியர் ஆறுதல் கூறி தேற்றியதுடன், ஒவ்வொரு நாள் இரவு உணவுடன், எனக்கு மட்டும் காய்ச்சிய பால் தர ஏற்பாடு செய்தார். விடுதியில் தங்கியிருந்த, 350 மாணவர்களுக்கு மத்தியில், தனி கவனம் செலுத்தி என்னை அன்புடன் கவனித்தது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எனக்கு, 78 வயதாகிறது. சென்னை மாநகராட்சியில், 37- ஆண்டுகள் பணிபுரிந்து, அதிகாரியாக உயர்ந்து ஓய்வு பெற்றேன். பள்ளி படிப்பின் போது, குடும்பத்தில் இழப்பால் ஏற்பட்ட கவலையை போக்கி, பரிவு காட்டிய வகுப்பாசிரியர் திரவியம் நினைவை போற்றுகிறேன்.

- ஜி.கோவிந்தராஜன், சென்னை.

தொடர்புக்கு: 99520 52343.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us