தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தணிந்தது கோபம்!

தணிந்தது கோபம்!

தணிந்தது கோபம்!


PUBLISHED ON : நவ 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி, ஷத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில், 1989ல், 10ம் வகுப்பு படித்தேன். பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தலைமையாசிரியர் சுப்பையா காலை, மாலை சிறப்பு வகுப்புகளை மிகவும் கண்டிப்புடன் நடத்துவார்.

அன்று காலை வகுப்புக்கு தாமதமாகச் சென்ற என்னிடம், ‘ஏன் லேட்டு...’ என கேட்டு, தண்டிப்பதற்காக பிரம்பை ஓங்கினார். சற்று தயக்கத்துடன், ‘மழை பெய்ததால், பேப்பர் போட்டு திரும்புவதில் தாமதம் ஆகிவிட்டது...’ என்றேன்.

உடனே தணிந்து, ‘என்னது... பேப்பர் போடுறியா...’ என விபரங்களை விசாரித்தவரிடம், ‘தினமலர் நாளிதழ்...’ என்றதும் ஓங்கிய பிரம்பை கீழே இறக்கினார். பின், ‘அன்றாட செய்தியை தரும் இதழை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது நல்ல பணி; உடற்பயிற்சியும் கூட...’ என பாராட்டி, ‘இன்றைக்கு முக்கிய செய்தி என்ன...’ என வினவினார். பதில் தெரியாமல் விழித்தபோது, ‘புத்தகத்தை படிப்பதுடன், செய்தித் தாள்களையும் அன்றாடம் வாசித்து, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்...’ என அறிவுறுத்தினார் தலைமையாசிரியர்.

அன்று முதல், விநியோகிப்பதுடன், தினமலர் நாளிதழை படிப்பதிலும் ஆர்வம் காட்டினேன். அதன் பயனாக, பின்னாளில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி அடைந்தேன்.

எனக்கு, 52 வயதாகிறது. திருமாலுகந்தான்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறேன். உழைப்புக்கு மதிப்பளித்து உயர்வுக்கு வழி காட்டிய தலைமையாசிரியர் சுப்பையாவை, பெருமிதத்துடன் போற்றி வாழ்கிறேன்.

- கி.பாலமுருகன், கரிசல்புலி, ராமநாதபுரம்.

தொடர்புக்கு: 94860 26527

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us