PUBLISHED ON : நவ 28, 2026

சென்னை, பட்டாபிராம் அரசு உயர்நிலை பள்ளியில், 1989ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
நெல்லையிலிருந்து பணிமாறுதலில் வந்திருந்தார், அறிவியல் ஆசிரியை பிரேமா. அவரது பேச்சு வழக்கை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. ஆனால், பாடங்களை தெளிவாக விளக்கியது, பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. வீட்டுப்பாடத்தை அன்றாடம் முடிக்கவில்லை என்றால், முழங்கையில் பிரம்பால் வெளுத்து விடுவார். அதனால், வீட்டுப்பாடத்தை தவறாமல் எழுதிவிடுவோம்.
அன்று இயற்பியலில், ‘லென்ஸ்’ என்ற ஆடிகள் குறித்து பாடம் நடத்தினார். அதில் குழி, குவி ஆடிகள் குறித்த விபரங்களை எடுத்துரைத்தார். புரியாமல் விழித்த என்னை கவனித்து, ‘அருகில் உள்ளதை பார்ப்பதற்கு குழி; துாரத்தில் இருப்பதை காண உதவுவது குவி ஆடி...’ என புரிய வைத்தார் அறிவியல் ஆசிரியை. அது மனதில் பதிந்தது. அறிவியல் விரும்பும் பாடமானது.
தற்போது என் வயது, 49; வழக்கறிஞராக தொழில் செய்கிறேன். பள்ளியில் பாடத்தை எளிமையாக கற்றுத்தந்த ஆசிரியை பிரேமாவின் ஓய்வு கால வாழ்க்கை, சிறப்புடன் அமைய பிரார்த்திக்கிறேன்.
- சி.கணபதி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 97907 16233
