PUBLISHED ON : அக் 31, 2026

கடலில் மிகப்பெரிய பரப்பில் அமைந்த புல், பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸ். இது, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடல் பகுதியில் உள்ளது. கடல் பரப்பில், 180 சதுர கி.மீ., வரை பரவி இருக்கிறது. இது 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
கடலில் புற்கள் இரண்டு வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன. மகரந்த சேர்க்கையால் உருவாகும் விதையில் இருந்து, புதிய செடிகள் வளர்வது ஒரு வகை. புல்லின் வேர் மற்றும் தண்டுகளில் இருந்து பிரிந்து, செடிகள் பிறப்பது மற்றொரு வகை. பரந்து விரிந்துள்ள இந்த கடல் புல்வெளி கோடிக்கணக்கான செடிகளால் ஆனது.
அனைத்தும் ஒரே விதையில் உருவானதாக மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த வகை புல், 'குளோனிங்' என்ற பல்படியாக்க முறையில் வளர்ந்து பரவுவதாக கண்டறியப் பட்டுள்ளது.
பருவநி லை மாற்றத்தால் இந்த கடல் புல்வெளி பரப்பு தற்போது குறைந்து வருகிறது. கடலில் ஏற்படும் சூறாவளி, கடல் நீர் வெப்பம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் அழிந்து வருகிறது. புல்வெளி மட்டுமல்ல, கடல் தாவரங்கள் பலவும் பருவநிலை மாற்றதால் பாதிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
