தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டேபிள் மலை!

டேபிள் மலை!

டேபிள் மலை!


PUBLISHED ON : ஜூன் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென் ஆப்ரிக்கா, கேப் டவுன் நகரத்தில் உள்ளது, டேபிள் மலை. மிதக்கும் பெரிய மேடை போல உயர்ந்து நிற்கிறது. இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும் நிறைந்த தனித்துவ நிலப்பரப்பாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுற்று லா பயணியரை ஈர்க்கிறது இந்த மலை. வாழ்வுக்கும், இயற்கைக்கும் இடையில் நெருங்கிய உறவைக் காட்டுகிறது.

இதன் உயரம், கடல் மட்டத்திலிருந்து 1,086 மீட்டர். மலையின் மேல்பகுதி சமமாக இருப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும் போது, பெரிய மேஜை போன்ற தோற்றம் தருகிறது. இதனாலே, 'டேபிள் மலை' என, பெயர் ஏற்பட்டது.

மலையின் மேற்பகுதியில், அடிக்கடி மேகங்கள் படர்ந்து, வெள்ளைத்துணி போர்த்தியது போன்ற காட்சியை உருவாக்கும். உள்ளூர் மக்கள் இதை, 'மேஜை துணி' என, அழைக்கின்றனர். கடல் காற்றும், மலை உயரமும் சேர்ந்து இந்த இயற்கை நிகழ்வு உருவாகிறது. கேப் டவுன் நகர வான் அழகை மேலும் உயர்த்துகிறது.

இது, உலகில் மிகப் பழமையான உயிரியல் பகுதிகளில் ஒன்று. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில், பல இப்பகுதிக்கே தனித்துவமானவை. இது, உலகில் பாரம்பரியம் நிறைந்த இயற்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணியருக்காக பாதுகாப்பான நடைபாதைகள், பார்வை மேடைகள் உள்ளன. ஆய்வு மையங்களும் உள்ளன. இயற்கையின் வனப்பை காட்டும் உயிர்ப்பான சின் னமாக உயர்ந்து நிற்கிறது டேபிள் மலை.

- வி.திருமுகில்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us