தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/துாய்மையின் சிறப்பு!

துாய்மையின் சிறப்பு!

துாய்மையின் சிறப்பு!


PUBLISHED ON : ஆக 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, புரசைவாக்கம், லேடி எம்.சிடி.எம்., உயர் நிலைப் பள்ளியில், 1982ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியராக இருந்த வசந்தகுமாரியே வரலாறு பாடமும் நடத்தினார்.

என்.சி.சி., என்ற தேசிய மாணவர் படைப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பாளராகவும் இருந்தார். ஒழுக்கத்தை கடைபிடிப்பதில் முதன்மையிடம் வகித்தார்; எங்களுக்கும் அதை பயிற்றுவித்து தவறாமல் கடைபிடிப்பதை கண்காணித்தார்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், 'எந்த வீட்டில் சமையல் அறையும், கழிப்பறையும் சுத்தமாக இருக்கிறதோ, அங்கு நோய்கள் அணுகாது. கழிப்பறையை, நாமே தான் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்வதை அவமரியாதையாக கருதக் கூடாது... என் வீட்டு கழிப்பறையை, நான் தான் சுத்தம் செய்கிறேன். அதனால் மிகுந்த பெருமையடைகிறேன்...' என எடுத்துரைத்தார். அது மனதில் பதிந்தது. வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்யும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவதுடன், இளையோருக்கும் கற்றுக் கொடுக்கிறேன்; பயிற்சி செய்ய வைக்கிறேன்.

தற்போது வயது, 54. இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒழுக்கம், சுகாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர துாண்டிய வகுப்பாசிரியை வசந்தகுமாரியை போற்றி, நலமுடன் வாழ்கிறேன்.



- கிரிஜா ஸ்ரீனிவாசன், ஈரோடு.

தொடர்புக்கு: 90806 25825.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us