தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வரகரிசி இனிப்பு பணியாரம்!

வரகரிசி இனிப்பு பணியாரம்!

வரகரிசி இனிப்பு பணியாரம்!

1


PUBLISHED ON : செப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1 கப்

உளுந்தம் பருப்பு, வெல்லம் - தலா கால் கப்

தேங்காய் துருவல் - 1 கப்

வாழைப்பழம் - 1

ஏலக்காய், தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வரகரிசி, உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, வடிகட்டவும். ஊறிய வரகரிசி, உளுந்தம் பருப்பு, வாழைப்பழம், ஏலக்காயுடன் வெல்லக்கரைசலை சேர்த்து, தோசை பதத்திற்கு அரைக்கவும்.

பின், அந்த மாவில் உப்பு, தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும். பணியார கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்து மிக்க, 'வரகரிசி இனிப்பு பணியாரம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- வ.ருக்மணி, சிவகங்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us