PUBLISHED ON : மே 23, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப்,
கடலை மாவு - 3
தேக்கரண்டி,
சோள மாவு, அரிசி மாவு - தலா 2 தேக்கரண்டி,
மிளகாய் துாள்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வாழைப் பூவை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் புரட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க, வாழைப்பூ பஜ்ஜி தயார்.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
- நா.புஷ்பராணி, சென்னை.
