PUBLISHED ON : செப் 26, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பொட்டுக்கடலை மாவு - 250 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
வெண்ணெய், சோம்பு, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பு ழுங்கல் அரிசியை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன், காய்ந்த மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த மாவில், உருக்கிய வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு சேர்த்து, பதமாக பிசையவும். அதை முறுக்கு அச்சில் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவை மிக்க, 'வெங்காய முறுக்கு' தயார். மாலை நேர சிற்றுண்டியாக உண்ண ஏற்றது.
- க.வித்யா, கோவை.
