தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : அக் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ன்புள்ள அம்மா...

ஓ.டி.டி.,யில் எம்.ஜி.ஆர்., நடித்த திரைப்படங்களை என் அம்மாவுடன் சேர்ந்து நானும் பார்த்தேன். அவற்றில், எம்.ஜி.ஆர்., நடிகர்கள் நம்பியார், பி.எஸ்.வீரப்பாவுடன் போடும் வாள் சண்டையும், சிலம்பச் சண்டையும் கண்டு பிரமித்துப் போனேன்.

பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் எனக்கு சிலம்பம் கற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வம் உள்ளது. இதை சென்னையில் யாரிடம் எப்படிக் கற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. சற்று வழி காட்டுங்களேன். ப்ளீஸ்...

இப்படிக்கு, ராஜ்மோகன்.

அ ன்பு ராஜ்மோகன்...

உன் ஆர்வம் அபூர்வமானது. பெரும்பாலும் நகர வாசிகளுக்கு இது போன்ற ஆசை எழாது.

உனக்கு சிலம்பம் கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டதிலிருந்து, நீ சற்று வித்தியாசமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் என்ற அமைப்பு இயங்குகிறது. இதற்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திரன் தலைவராக இருந்து பெரும்பங்காற்றியிருக்கிறார். அற்புதமான மனிதர்; எளிமையானவர். இனிமையாக பழகக்கூடிய தன்மை வாய்ந்தவர்.

அவர் தலைமையில் எத்தனையோ சிலம்ப போட்டிகளை நடத்தியிருக்கிறார். பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். ஏராளமான இளைஞர்கள் சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளனர்.

இப்போதும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இயங்குகிறது. மாநில தலைவர்கள் இருக்கின்றனர். சமூக வலைதளத்தில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் என தேடிப் பார் மகனே. அதன் மாநிலத் தலைவர் யார் என்பது தெரியவரும். அவரை தொடர்பு கொண்டால் வழி காட்டுவார். சிலம்பம் கற்றுக் கொள்ளவும், அதில் முதன்மை பெறவும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us