தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : அக் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ன்பு ஆன்ட்டி...

அட்ஷய திருதியில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதே... உண்மையில் அந்நாளில் நகை வாங்க வேண்டுமா... வாங்கினால் நகைகள் பெருகுமா... இதன் தாத்பரியம் என்ன?

என் அம்மா அதிகாலை 4:00 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, சமைத்து வைத்து விட்டு, 8:00 மணிக்கெல்லாம், பிரபலமான நகைக் கடைக்கு பேருந்து பிடித்து ஓடி, வரிசையில் நின்று, கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, வெயிலில் தள்ளு முள்ளுவில் அகப்பட்டு சாப்பாடின்றி, இருட்டிய பின், 8:00 மணிக்கு, ஒரு கிராம் காசு வாங்கி களைத்து, வீடு திரும்பி சுருண்டு படுப்பார்.

இதெல்லாம் தேவையா... ஒரு கிராம் தங்கத்திற்காக தானும் கஷ்டப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்துவது நகைகள் பெருகும் என்பதற்காகவா...

இப்படிக்கு,

சுரேஷ்குமார்.

அ ன்புள்ள சுரேஷ்...

இந்த அட்ஷய திருதியை அபத்தத்தை நகைக் கடை முதலாளிகள் தவிர, வேறு யார் ஏற்படுத்தியிருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக தான் இந்த பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடித்து பிடித்து நெருக்கியடித்து வெயிலில் காய்ந்து, அட்ஷய திருதியை அன்று நகை வாங்க சொல்லி எந்த கடவுள் சொன்னார். எத்தனை குருமார்கள், ஆச்சாரியார்கள் கூறினர்?

ஆதிகாலத்தில் அட்ஷய திருதியை அன்று கால்படி கல் உப்பு வாங்குவர். இதுதான் பழக்கமே தவிர, நகை வாங்குவது அல்ல. மகாபெரியவர் சங்கராச்சாரியார் கூட உப்பு பற்றி தான் சொல்லியிருக்கிறாரே தவிர தங்கம் அல்ல.

உன் அம்மா இத்தனை ஆண்டுகள் அந்நாளில் தங்கம் வாங்கியிருக்கிறாரே, எவ்வளவு தங்கம் பெருகிற்று என்று கேள்! ஒவ்வொரு ஆண்டும் அவர் வாங்கிய ஒரு கிராம், அரை கிராம் தவிர வேறு நகைகள் சேர்ந்ததா... சின்ன வயதில் நோட்டுப் புத்தகத்தினுள் மயில் இறகை வைத்து, குட்டி போடும் என்று, ஒவ்வொரு நாளும் பார்த்தோமே அப்படித்தான் இது! மயில் இறகு குட்டிப் போட்டதா என்ன...

அதை அந்த வயதில் நம்பியது குழந்தைத்தனம். இந்த வயதில் தங்கம் பெருகும் என்று எதிர்பார்ப்பதற்கு பெயர் என்ன என்றே தெரியவில்லை.

நீ கேட்டாயே, அந்நாளில் தங்கம் வாங்கினால் பெருகுமா என்று...

ஆம்... பெருகும். நகைக்கடை முதலாளிகளுக்குப் பணம் பெருகும். அந்த ஒரே நாளில் கோடிக்கணக்கில் குவியும்! இதுதான் அட்ஷய திருதியை!

இதை உன் அம்மாவை படிக்கச் சொல்! வரும் அட்ஷய திருதியை அன்று, தங்கம் வாங்க போகாமல் இருப்பார். அன்று நகை வாங்கினால் பெருகும் என்பதை பெண்கள் புறக்கணித்தால் தான், தானாக இந்த மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி விழும்!

அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us