/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரம்!
/
உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரம்!
PUBLISHED ON : பிப் 14, 2026

உலகின் மிக விலையுயர்ந்த கை கடிகாரம் என்ற பெருமையை உடையது, 'கிராப் ஹாலுசினேஷன்' கடிகாரம்.
இதை, வெறும் கடிகாரம் என்பதை விட, அரிய வகை வைரங்களால் ஆன, அற்புதமான கலைப் படைப்பு என்றே கூறலாம். இந்த கடிகாரத்தில், மொத்தம் 110 காரட் எடையுள்ள வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
பிங்க், பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உள்ள அழகிய வைரங்கள் ஒன்றாக இணைந்து, இந்த கடிகாரத்தை, மயக்கும் வண்ண ஓவியம் போல மாற்றியுள்ளன.
இதன் இந்திய மதிப்பு, 500 கோடி ரூபாய்க்கு மேல். இப்போதும், உலகின் மிக அதிக விலை கொண்ட கடிகாரமாக இது திகழ்கிறது.
பிரிட்டனை சேர்ந்த, 'கிராப் டயமண்ட்ஸ்' என்ற பிரபல நிறுவனம், இதை உருவாக்கியது. இந்த கடிகாரம் யாருக்கும் விற்கப்படவில்லை. நேரம் காட்டுவதை விட, இது செல்வத்தின் உச்சத்தையும், மனித கைத்திறனின் அற்புதத்தையும் வெளிப்படுத்துகிறது.
- -வி.கவுதம சித்தார்த்

