
என் வயது 91; தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை விரும்புகிறேன். ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்து படித்து வருகிறேன். அனைத்து வயதினரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இடம் பெறுகின்றன.
நாட்டு நடப்புகளை தரும் 'அதிமேதாவி அங்குராசு' பகுதியில் உடல் நலம் பற்றிய குறிப்புகள், விளையாட்டு செய்திகள், வீட்டு உபயோக குறிப்புகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது ஆர்வமூட்டுகிறது.
ஆகஸ்ட் 2, 2025 சிறுவர்மலர் இதழில் பலமுக மன்னன் ஜோ படக்கதை இடம் பெற்றிருந்தது மிக்க மகிழ்ச்சி தந்தது. இதைப் படித்தும் பல ஆண்டுகளுக்கு முன், வெளிவந்த படக்கதைகள் நினைவுக்கு வந்தன.
ஒவ்வொரு வாரமும் அடுத்த இதழ் எப்போதும் வரும் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறேன். எல்லாரும் விரும்பும் வகையில் சிறுவர்மலர் இதழ் அமைந்துள்ளது. என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!
- சு.கருப்பையா, மதுரை.
தொடர்புக்கு: 96775 75533