
என் வயது 71. ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றினேன். சிறுவர்மலர் இதழை கடந்த சில ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். தனிமையால் ஏற்படும் தவிப்பை போக்க உதவி வருகிறது.
மாணவப் பருவத்தில் ஒழுக்கத்தின் மேன்மையை பேண வேண்டிய அவசியத்தை உணர்த்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள் மேன்மையாக உள்ளன. சிறியோர் மட்டுமின்றி, பெரியோரும் பின்பற்றும் வகையில் நீதிபோதனை கதைகள் அமைந்து உள்ளன. பொது அறிவை வளர்ப்பதற்கு, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியில் வரும் செய்திகள் உதவுகின்றன.
பாரம்பரிய உணவு சமைக்க கற்றுத் தரும், 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' செய்முறைகளை பின்பற்றுகிறார் என் மனைவி. சமைத்து உண்ணும் போது வித்தியாசமாகவும், ருசியாகவும் உள்ளன. என் போன்ற முதியோர் இதழை வாசிக்கும்போது குழந்தை போலாகி உற்சாகம் கொள்கிறோம். சிறுவர்மலர் இதழ் மேலும் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.
- நா.நாச்சிமுத்து, கோவை.
தொடர்புக்கு: 80568 20390

