
எ ன் வயது, 66. மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளியில், இடைநிலை ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர் மலர் இதழை, 15 ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்.
இதழ் வெளிவரும் சனிக்கிழமைகளை, ஆவலோடு எதிர்பார்ப்பேன். முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை, அனைத்து வயதினருக்கும் வேண்டிய தகவல்களை அள்ளித் தருகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வேறுபட்ட மனநிலைகளையும், அனுபவங்களையும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி வெளிப்படுத்துகிறது. ருசியாக மட்டுமின்றி, சத்தான உணவு வகைகளை, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' கற்றுத்தருகிறது.
பள்ளியில் நடக்கும் சித்திரம் வரையும் போட்டிகளில் என் பேரக் குழந்தைகள் பங்கேற்க, 'மழலையர் பக்கம்!' ஆர்வமூட்டுகிறது. ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள், 'இளஸ் மனஸ்!' தரும் தகவல்கள், குழந்தைகள் மட்டுமின்றி என் வயதினருக்கும், அறிவை கூர்மைப்படுத்துகிறது. திறமையாளர்களுக்கு பரிசுகளையும் அள்ளித்தந்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் சிறுவர் மலர் இதழ், மேன்மேலும் வளர என் வாழ்த்துகள்.
- பூ.கலைவாணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 97894 16310

