
என் வயது, 63; இல்லத்தரசியாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக சிறுவர் மலர் படிக்கிறேன். என் மகன், மருமகள், பேத்தி என அனைவருக்கும் பிடித்த இதழ் சிறுவர்மலர்.
என் பேத்தி 4ம் வகுப்பு படிக்கிறாள். அவளை சிறுவர்மலர் இதழை படிக்கச் சொல்லி கேட்பேன். இதனால் என் பேத்திக்கு வாசிப்பு திறன் அதிகரித்து, தமிழ் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதோடு, பிழையின்றி எழுதும் பழக்கமும் வந்துள்ளது.
படக்கதைகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது, புதிர்களை விடுவிப்பது போன்றவை, அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கின்றன.
என்னைப் போலவே, என் மருமகளுக்கும் மிக பிடித்தமானது, 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி. அதில் வரும் உணவை, அன்றே செய்து ருசிப்போம். மேலும் பயனுள்ள பகுதிகளுடன் சிறுவர்மலர் இதழ் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.
- எஸ்.கஸ்துாரி, விருதுநகர்.
தொடர்புக்கு: 93623 42020

