
அஞ்சல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் வயது, 65. மாத சந்தா செலுத்தி, தினமலர் நாளிதழை இல்லம் வர வைத்துள்ளேன். சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழை, 6ம் வகுப்பு படிக்கும் என் பேரன் எடுத்து சென்று விடுவான்.
'சிறுவர்மலர் தானே; அதில் என்ன முக்கியத்துவம் இருக்க போகிறது' என்று எண்ணி, நானும் கண்டுகொள்வதில்லை.
ஒருநாள் சிறுவர்மலர் இதழில் ஏற்பட்ட சந்தேகத்தை என்னிடம் கேட்டான். எனக்கே நீண்ட நேர சிந்தனைக்குப் பின் தான் விடை தெரிந்தது. அவனுக்கு புரிய வைத்தேன். சிறுவர்மலர், சிறுவருக்குத் தானே என அலட்சியப்படுத்தியதை நினைத்து வேதனை அடைந்தேன். சிந்திக்க வைத்து, சிந்தனையை சிறப்படைய வைக்கும் சிறுவர்மலர் இதழ், பெரியவர்களுக்கும் பயன்தரும் என்பதை புரிந்து கொண்டேன்.
சிறுவர், சிறுமியரை மட்டுமின்றி, பெரியவர்களையும் பரவசம் அடைய வைக்கும் பணி தொடரட்டும். சிறுவர்மலர் இதழை வாழ்த்தி வணங்குகிறேன்.
- பி.பாண்டி, மதுரை.
தொடர்புக்கு: 88704 58128

