PUBLISHED ON : பிப் 14, 2026

என் வயது, 52. தர்மபுரி மாவட்டம், சின்னப்பள்ளத்துார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன்.
பள்ளி, கல்லுாரியில் பெற்ற அனுபவங்களை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளும் அரிய விஷயங்கள், அனைத்து தரப்பினருக்கும் உற்சாகம் அளிக்கிறது; அதே நேரம், மாணவ - மாணவியருக்கு ஒரு அனுபவ பாடமாகவும் அமைகிறது.
குழந்தைகளின் ஓவியத்திறனை வளர்ப்பதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக, 'மழலையர் பக்கம்!' பகுதி உள்ளது. சிறுவர்களிடம் நற்பண்புகள் வளர்வதற்கு, நன்னெறி கதைகள் உதவுகின்றன. அறிவியல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், துணுக்குச் செய்திகள், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அறிவூட்டுகிறது. இதனால், சிறுவர்மலர் இதழை எதிர்பார்த்து, சனிக்கிழமைகளில் ஆவலோடு காத்திருப்பேன்.
ஒட்டுமொத்தத்தில், மாணவ - மாணவியருக்கு உதவும் தகவல்களை தெரிவிக்கவும், என்னுடைய கற்பித்தல் பணிக்கும் உறுதுணையாக இருக்கிறது, சிறுவர்மலர். அதன் பணி தொடர, என் வாழ்த்துகளும், வணக்கங்களும்.
- மா.பழனி, தர்மபுரி.
தொடர்புக்கு: 96265 87770

