PUBLISHED ON : மே 30, 2026

என் வயது, 30. தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். சிறுவர்மலர் இதழை 17 ஆண்டுகளாக படித்து வருகிறேன். இதில் வெளிவரும் படக்கதையின் ரசிகன். சிரிப்பை மூட்டும் 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியில் வெளியாகும் தமாசுகள் படித்தவுடன் சிந்திக்கவும் வைக்கின்றன. எந்த விதமான சந்தேகங்களுக்கும், 'இளஸ் மனஸ்!' பகுதியில் பதில் கிடைக்கிறது.
சிறுவர், சிறுமியர் பிஞ்சு விரல்களில் மலரும், 'மழலையர் பக்கம்!' ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. சிறுகதைகள் அறிவை வளர்ப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன. வித்தியாசமான, ஆரோக்கியமான உணவுகளை, 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி அறிமுகப்படுத்துகிறது.
மொத்தத்தில் தலைவாழை இலையில், அறுசுவை உணவை பரிமாறி, ருசித்து சாப்பிடுவது போல, சிறுவர்மலர் இதழ் பரவசமூட்டுகிறது. அது மேன்மேலும் சிறந்து விளங்க மனதார வாழ்த்துகிறேன்.
- ஆர்.நாகராஜன், புதுக்கோட்டை.
தொடர்புக்கு: 91501 19159
