PUBLISHED ON : ஜூன் 06, 2026

என் வயது, 73; பருத்தி நுாற்பு ஆலையில் கணக்கராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 36 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.
சிறுவர்மலர் இதழையும் தவறாமல் படிக்கிறேன். இதில் இடம் பெறும், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதியில் வரும் உணவு செய்முறை வித்தியாசமாக உள்ளது. குடும்பத்தில் புதிய உணவுகளை சமைத்து உண்ண உதவி வருகிறது.
நல்லொழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் சிறுகதைகள் அமைந்துள்ளன. பொது அறிவை வளர்க்கும் கட்டுரைகள் தரமாக உள்ளன.
சிறுவர்மலர் இதழில் வெளியாகும் வித்தியாசமான செய்திகள், அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகள் குறித்த கட்டுரைகளை சேகரித்து, நோட்டில் ஒட்டி சேமித்து வைத்துள்ளேன்.
என் வீட்டிற்கு வருவோருக்கு இதை படிக்க கொடுக்கிறேன். அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியர் இதனால் மிகவும் மகிழ்வதுடன், நல்லறிவும் பெறுவதை காண முடிகிறது. சிறுவர்மலர் இதழ் சேவை மென்மேலும் வளர்ந்து, இளைய சமுதாயத்துக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்!
- எம்.நடராஜன், கோவை.
தொடர்புக்கு: 90422 05230
