PUBLISHED ON : ஜூன் 27, 2026

என் வயது, 62; பல்கலை கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சனிக்கிழமைகளில் தவறாமல், சிறுவர்மலர் இதழை குடும்பத்தினருடன் படித்து வருகிறேன். என் கணவர், என்.மனோகரனும் விரும்பி படிப்பார்.
மாணவச் செல்வங்களுக்கு அறிவு தரும் பொக்கிஷமாக திகழ்கிறது, சிறுவர்மலர். பள்ளிக்கால நினைவுகளை தாங்கி, 'ஸ்கூல் கேம்பஸ்' மலர்வது மகிழ்ச்சியளிக்கிறது.
தொடர்கதை, படக்கதை, பொது அறிவு தகவல்கள், புதிர் போட்டி, மொக்க ஜோக்ஸ், சிறுகதை, இளஸ் மனஸ், மம்மீஸ் ெஹல்தி கிச்சன் என, அனைத்து பகுதிகளும் பல்சுவையை வழங்குகின்றன. மழலையர் பக்கத்தில் ஓவியங்கள் அசத்தலாக உள்ளன.
சிறுவர்மலர் இதழைப் படிக்க, இரட்டையராக பிறந்த என் பேத்தியர் போட்டி போடுவர். அவர்களுடன், அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமியரும் ஒவ்வொரு வாரமும் விரும்புவதை காண, வியப்பு ஏற்படுகிறது. ஈடு இணையற்ற அறிவுப் பொக்கிஷமாக திகழும், சிறுவர்மலர் இதழுக்கு நன்றி!
- ஆ.ரேணுகாதேவி, கோவை.
தொடர்புக்கு: 94883 15599
