PUBLISHED ON : ஆக 01, 2026

அ நிறம் | அளவு
என் வயது, 63. தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிகிறேன். ஒவ்வொரு வாரமும், எங்கள் குடும்பத்தில் சிறுவர்மலர் இதழை படிக்க, கடும் போட்டியே நடக்கிறது. இதன் ஒவ்வொரு பக்கமும் சிறுவர், சிறுமியர் மற்றும் பெற்றோர் என, அனைவரும் படிக்க உகந்ததாக உள்ளன.
முதலில் சிறுவர்மலர் இதழில் அனைத்து பகுதிகளையும் படித்து விட்டு தான், மற்றவர்களுக்கு கொடுப்பேன். தொடர்கதை, சிறுகதை, படக்கதை, கட்டுரைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. நல்ல அறிவுரைகளை தருகிறது, 'இளஸ் மனஸ்' பகுதி. சிறந்து விளங்கும், சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துகள்.
- பி.ஜெயகுமார், விருதுநகர்.
தொடர்புக்கு: 97891 89102
