PUBLISHED ON : ஆக 08, 2026

என் வயது, 65. இல்லத்தரசியாக இருந்து ஓய்வு பெற்று, மருமகள் மெச்சும் மாமியாராக வாழ்கிறேன். 'தினமலர் - சிறுவர்மலர்' இதழை விரும்பி படிப்பேன். ஆங்கில வழி கல்வி முறை உள்ள பள்ளியில் பயிலும் என் பேரன், பேத்திகளுக்கு தமிழ் ஆர்வமும், தமிழ் அறிவும் சிறுவர்மலர் மூலமாக கற்றுக் கொடுக்கும் தமிழாசிரியை போல உள்ளேன்.
சனிக்கிழமை வரும் சிறுவர்மலர், எங்கள் குடும்பத்திற்கு ஒன்று போதாது. இரண்டு பேப்பர் வாங்குவோம். 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், பள்ளியில் படித்த நாட்களை நினைவுபடுத்தும். அறிவைத் துாண்டும், சிறுகதை; சிரிக்க வைக்கும், மொக்க ஜோக்ஸ்...
விதவிதமான, மம்மீஸ் ஹெல்தி கிச்சன் சமையல்; மீண்டும் மீண்டும் பார்க்க துாண்டும் அட்டைப் படம்; சுட்டீஸ்களின் முத்து கையெழுத்து என, இவையெல்லாம் படித்து தெரிந்து கொள்ள எனக்கும், என் போன்ற வாசகர்களுக்கும் ஒரு கொடுப்பினையே. இப்படிப்பட்ட சிறுவர்மலர் மலர்ந்து, மலர்ந்து நறுமணம் வீசட்டும் என, மனமார வாழ்த்துகிறேன்.
-வி. சரோஜா, கோவை.
தொடர்புக்கு: 96267 33166
