PUBLISHED ON : ஆக 15, 2026

என் வயது, 75. ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சிறுவர்மலர் இதழின் தீவிர ரசிகன். என் மகன், மகளும் படிக்கும் மலராக உள்ளது. இப்போது, பேரப் பிள்ளைகளின் விருப்பத்திற்குரியதாகவும் திகழ்கிறது.
சனிக்கிழமை வந்தாலே, பேரப் பிள்ளைகள், சிறுவர்மலர் பக்கங்களை புரட்டி, 'மழலையர் பக்கம்' ஓவியங்களை மாதிரியாக கொண்டு வரையும் பயிற்சியை செய்கின்றனர். 'புதிர்' பகுதியில், வித்தியாசங்கள் கண்டுபிடிக்கின்றனர்; சிறுகதையையும் தவறாமல் படிக்கின்றனர். இது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
நான், சிறுவர்மலர் இதழை படித்து முடித்த பின் தான், நாளிதழை வாசிக்க துவங்குவேன். பள்ளி பருவத்தை நினைவூட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், என் விருப்பத்திற்குரியவை.
'தொடர்கதை, படக்கதை, மொக்க ஜோக்ஸ், மம்மீஸ் ஹெல்தி கிச்சன், இளஸ் மனஸ்' பகுதி எல்லாமே, சுவாரசியமாய் உள்ளன. அனைவரையும் கவரும் சிறுவர்மலர், சிந்தனை மலராக, வாடா மலராக பன்னெடுங் காலம் பவனி வர, மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
- ஆர்.தனபால், சென்னை.
தொடர்புக்கு: 98409 72340
