PUBLISHED ON : ஆக 22, 2026

என் வயது 44; அரசு பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு வாரமும் தவறாமல், சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இ தில் இடம்பெறும், சிறுகதை, நற்குணங்களை வளர்க்க உதவுகிறது. பள்ளி நிகழ்வுகளை கூறும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், நெகிழ்வு தருகின்றன. மழலையர் பக்கம், மொக்க ஜோக்ஸ் என, ஒவ்வொரு பகுதியும் மிகவும் பிடித்தமாக இருக்கிறது.
வகுப்பில் பாடம் நடத்தும் போது, மாணவர்களுக்கு சிறுவர்மலர் இதழ் தரும் பயன்மிக்க கருத்துக்களை எடுத்துக் கூறுகிறேன். இது, சிறுவர்களுக்கு மட்டுமானது என எண்ணுவோர், ஒருமுறை வாசித்தால், அனைவருக்குமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு வாரமும் புத்துணர்ச்சியை தருகிறது, சிறுவர்மலர் இதழ். தொடர்ந்து வாசிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
- மா.கல்பனா, தர்மபுரி.
தொடர்புக்கு: 87780 65887
