PUBLISHED ON : ஆக 29, 2026

என் வயது 26; பொறியியல் பட்டதாரி. சிறுவர்மலர் இதழை, 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்திருந்து படிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் படிக்கும் ஆர்வத்தை தருகிறது.
'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி பள்ளி அனுபவங்கள், புதுமையாக உள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை, 'புதிர்' பகுதி சிந்தனையை தட்டி எழுப்புகிறது.
'மொக்க ஜோக்ஸ்' பகுதி, தமாஷுகளை படித்து, ரசித்து சிரித்து கொண்டே இருக்கலாம். 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' புதிய வகை உணவுகளை தயாரிக்க உதவுகிறது. குழந்தைகளின் புகைப் படங்களை, 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்கள் வரையும் ஓவியங்களின் தொகுப்பான, 'மழலையர் பக்கம்' கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. விமர்சனங்களை தெரிவிக்க, 'வாசகர் பகுதி' தடை ஏதும் தெரிவிப்பதில்லை. பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷமாக விளங்கும்
சிறுவர்மலர் இதழ் மென்மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறேன்.
- கோ.செல்வமுத்துக்குமார்,
கடலுார்.
