PUBLISHED ON : செப் 05, 2026

என் வயது, 73. சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக தவறாமல் படித்து வருகிறேன். புத்தகத்தை கையில் எடுத்ததும் முதலில், 'புதிர்' பகுதியை தான் பார்ப்பேன். அதில், விடையை கண்டுபிடிக்க மூளைக்கு வேலை கொடுப்பேன். பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது, 'இளஸ் மனஸ்' பகுதி. என் தோழியரோடு உரையாடவும் பயன்படுகிறது.
மேலும், 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் சிரிக்கும் மழலையர் முகங்களைப் பார்த்தாலே, கவலைகள் பறந்தோடி விடுகின்றன.
'சுட்டீஸின் முத்து கையெழுத்து' எவ்வளவு திறமைசாலிகள் இருக்கின்றனர் என்பதை, உலகுக்கு தெரிய வைக்கிறது; இதை வேறு எந்த இதழும் செய்யவில்லை.
நாளிதழ்கள், இணைப்பு இதழ்களை வெளியிட்டாலும், தினமலர் இணைப்பு இதழ்கள் தான், முதல் மார்க் பெறுவதற்கு தகுதியானது என்பதை, யாராலும் மறுக்க முடியாது. என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
- பி.சியாமளா, தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 98944 89464
