PUBLISHED ON : செப் 12, 2026

என் வயது, 74. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 39 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். இணைப்பு இதழான சிறுவர்மலர் வெளியிடப்பட்ட, நவ., 22, 1985 முதல், ஒவ்வொரு வாரமும், தவறாமல் படித்து வருகிறேன்.
சிறுவர்கள் மனதில் நல்லொழுக்கம் விதைக்கும் சிறுகதைகள், வசீகரிக்கும் மாயாஜால கதைகள், குட்டீஸ்களின் முத்தான கையெழுத்து, ஓவியம் வரையும் திறமையை ஊக்குவிக்க, பரிசுகளுடன் தனித்தனிப் பகுதிகள் நிறைந்துள்ளன.
குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்கள், 'ரிலாக்ஸ்' ஆக சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்' பகுதி, மனதுக்கு ஆறுதல் மற்றும் வழிகாட்டியாக, 'இளஸ் மனஸ்' பகுதி உள்ளன. புதிர் பரிசு போட்டி, எளிய சமையல் குறிப்புகள் என, 'கம்ப்ளீட் பேக்கேஜ்' ஆக வருகிறது.
சிறுவர்மலர், எனக்கு மட்டுமின்றி, அமெரிக்காவில் இணைய தளத்தில் வாசிக்கும் என் பேரன் - பேத்தியருக்கு வாராவாரம் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. இது எனக்கும், என் மனைவி கோமதிக்கும் பெருமகிழ்ச்சி. சிறுவர்மலர் மென்மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
- எஸ்.வைத்தியநாதன், மதுரை.
தொடர்புக்கு: 9488259160
