தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 48; வெல்டராக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். சனிக்கிழமை என்றால் ஆவலோடு முழுதும் படித்து விடுவதையே முதல் பணியாக கொண்டுள்ளேன்.

பள்ளிக்கால நினைவுகளை பசுமையோடு பகிரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி மிகவும் விருப்பமானது. சுவாரசியமான படக்கதை, குழந்தைகள் வரையும் ஓவியங்களை ஊக்குவிக்கும், மழலையர் பக்கம், மூளைக்கு வேலை தரும், 'புதிர்' போட்டி என குதுாகலம் தருகிறது.

'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் வரும் படங்கள், மகிழ்ச்சி ஊட்டுகின்றன. சிரித்து மகிழ மொக்க ஜோக்ஸ்; அறிவுரை சொல்லும், 'இளஸ் மனஸ்' தொடர்; நீதிநெறி கதை, சுவையான சமையல் கற்றுத்தரும், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' என, அனைத்தும் சிறப்பு. இவற்றுடன் பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்துவது சிறுவர்மலர் இதழ் மட்டுமே.

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும், சிறுவர்மலர் இதழின் வாசகராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.



- சி.விஜயகுமார், கோவை.

தொடர்புக்கு: 98425 12302


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us