PUBLISHED ON : அக் 24, 2026

அ நிறம் | அளவு
என் வயது 35; நகைப் பட்டறையில் வேலை செய்கிறேன். வாரம் தவறாமல் சிறுவர்மலர் இதழை, 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். அது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் அறிவை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
பள்ளி நினைவுகளை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி புதுப்பிக்கிறது. வித விதமான சமையல் குறிப்புகளை கொடுத்து, 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!' பகுதி சுவையூட்டுகிறது. கவலை மறந்து வாய் விட்டு சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி உதவுகிறது.
மனதில் உள்ள குழப்பங்களுக்கு தெளிவை, 'இளஸ் மனஸ்!' பகுதி உண்டாக்குகிறது. மழலையர் பக்கம், குட்டி குட்டி மலர்கள் பகுதிகளும் மனதை கொள்ளை கொள்கின்றன. வாசகர் மனதில் என்றும் கம்பீரமாக வீற்றிருக்கும் சிறுவர்மலர் இதழ், தொடர்ந்து மணம் வீச வாழ்த்துகள்!
- எஸ்.செல்லபாண்டியன், பெங்களூரு.
தொடர்புக்கு: 88614 04088
