PUBLISHED ON : அக் 31, 2026

அ நிறம் | அளவு
என் வயது 60; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுவர்மலர் இதழுக்காக காத்திருப்பது இனிமை தருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சுகம் தருவதாக உள்ளது.
ஆசிரியர்களின் மதிப்பை உயர்த்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி அரிய கருத்துகளை அள்ளி தருகிறது. ஆலோசனைகள் வழங்கும், 'இளஸ் மனஸ்!' மனதிற்கு நிறைவை தருகிறது.
'புதிர்' பக்கம் மூளைக்கு வேலை கொடுக்கிறது. 'சுட்டீஸின் முத்து கையெழுத்து!' அச்சிட்டது போல் அமைந்துள்ளது.
'மழலையர் பக்கம்' கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் குழந்தைகள் முகங்கள் மனதிற்கு இதம் தருகின்றன. சிறப்பாக வெளி வரும் சிறுவர்மலர் இதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
- சி.பிலோமீனா, சென்னை.
தொடர்புக்கு: 72998 00294
