PUBLISHED ON : நவ 07, 2026

என் வயது, 27; மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சிறு வயது முதல் சிறுவர் மலர் இதழை தொடர்ந்து படித்து வருகிறேன். வாரமலர் இதழில் தமாஷ் எழுதி, பரிசு வாங்கியுள்ளேன்.
எங்கள் வீட்டில் அனைத்து பத்திரிகைகளும் வாங்கும் வழக்கம் உள்ளது; இதனால் வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது. இவற்றில், மிகவும் கவர்ந்தது, சிறுவர்மலர் இதழ் தான். இதை பொது அறிவுக் களஞ்சியம் என்றால் மிகையில்லை. குறிப்பாக, 'ஸ்கூல் கேம்பஸ்' படிக்கும் போது, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. நீதிக் கதைகள் அனைவரும் விரும்பி படிக்கும் வகையில் உள்ளன.
சி றுவர், சிறுமியர் வரைந்த ஓவியங்களை வெளியிட்டு திறமையை ஊக்குவிப்பது மகிழ்ச்சி தருகிறது. படக்கதை, தொடர்கதை, புதிர் போட்டிகள் அற்புதம். அதிலும், இந்துமதி எழுதும், 'இளஸ் மனஸ்' பதில்கள் உள்ளத்தில் நம்பிக்கையை அளிக்கின்றன. இதில் இன்னும் ஒரு சிறப்பம்சம், சுட்டீஸின் முத்து கையெழுத்து பகுதி. இதுபோன்ற சிறப்புகளால் சிறுவர்மலர் இதழ் மனதை கொள்ளை கொள்ளும் அற்புத மலராக உள்ளது.
- ஆர்.அருண்குமார், சென்னை.
