PUBLISHED ON : நவ 21, 2026

என் வயது, 48; மருந்துக்கடை நடத்தி வருகிறேன். 'சிறுவர்மலர்' இதழ் துவங்கிய போதிலிருந்தே, விரும்பிப் படித்து வருகிறேன். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டில், தினமலர் வந்ததும், சிறுவர்மலர் இதழை யார் முதலில் படிப்பது என, என் சகோதரிகளுடன் சண்டை வரும்.
அந்த காலத்தில் சிறுவர்மலர் இதழில் வெளி வந்த, பலமுக மன்னன் ஜோ, ராமு சோமு போன்ற படைப்புகள், இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. புதிர் பகுதியில் சரியான விடை அனுப்பி பலமுறை பரிசு வாங்கியுள்ளேன். என் குழந்தைகளின் படைப்புகளும், சிறுவர்மலர் இதழில் வெளி வந்துள்ளன.
'இளஸ் மனஸ்!' ஆலோசனையும், பள்ளி நாட்களை நினைவு படுத்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்களும் அருமையாக உள்ளன. வாழ்க்கையை வளமாக்க உதவும் சிறுவர்மலர் இதழை படிக்கும் போது சிறுவனாகவே மாறி விடுகிறேன்.
- ஏ.வெள்ளிங்கிரி, கோவை.
தொடர்புக்கு: 98422 66133
