PUBLISHED ON : ஜன 01, 2026

பத்ம விருது - 132
ஏப்.22: பத்ம விபூஷண் 7, பத்ம பூஷன் 19, பத்ம ஸ்ரீ 113 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் முக்கியமானவர்கள்...
பத்ம விபூஷண்
* ஜெகதீஷ் சிங் ஹெகர், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
* வாசுதேவன் நாயர், (மறைவுக்குப்பின்) எழுத்தாளர், கேரளா
* நாகேஸ்வர ரெட்டி, மருத்துவர், தெலுங்கானா
பத்ம பூஷன்
* அஜித், நடிகர்
* ஷோபனா, நடிகை
* நல்லி குப்புசாமி, தொழில், வர்த்தகம்
பத்ம ஸ்ரீ
* டாக்டர் ஆர்.லட்சுமிபதி, (தினமலர் இணை நிர்வாக ஆசிரியர்) இதழியல், கல்வி
* கே.தாமோதரன், சமையல் கலை
* அருந்ததி பட்டாச்சார்யா, எஸ்.பி.ஐ., முன்னாள் தலைவர்
பிரதமர் மோடிக்கு 10 சர்வதேச விருது
பிரதமர் மோடியின் தலைமைப்பண்பு, ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அங்கீகாரமாக இதுவரை 29 நாடுகளின் விருதுகளை பெற்றுள்ளார். இதில் இந்தாண்டு 10 நாடுகள் விருது வழங்கின.
மார்ச் 5 - பார்படாஸ் - ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ்
மார்ச் 11 - மொரீஷியஸ் - ஆர்டர் ஆப் தி ஸ்டார், கீ ஆப் தி இந்தியன் ஓசன்
ஏப். 5 - இலங்கை - மித்ர விபூஷனா
ஜூன் 15 - சைப்ரஸ் - ஆர்டர் ஆப் மாகாரியோஸ்
ஜூலை 2 - கானா - ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா
ஜூலை 4 - டிரினிடாட் டொபாகோ - ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக்
ஜூலை 8 - பிரேசில் - ஆர்டர் ஆப் சதர்ன் கிராஸ்
ஜூலை 9 - நமீபியா - ஆர்டர் ஆப் தி வெல்விட்சியா
டிச. 17 - எத்தியோப்பியா - கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா
டிச. 18 - ஓமன் - ஆர்டர் ஆப் ஓமன்
தேசிய விருதுகள்
செப்.23: திரைத்துறையில் 2023க்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
சிறந்த படம் - '12த் பெயில்' (ஹிந்தி)
நடிகர் - ஷாருக்கான் (ஜவான்), விக்ராந்த் மாசே (12த் பெயில்)
நடிகை - ராணி முகர்ஜி (மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே)
இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (வாத்தி, தமிழ்), ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் (அனிமல், ஹிந்தி)
துணை நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
தமிழ் மொழி படம் - பார்க்கிங்
திரைக்கதை - பார்க்கிங்
ஜேசுதாசுக்கு கவுரவம்
ஏப்.6: பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு, பிரிட்டனின் பிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர் விருது வழங்கப்பட்டது.
ஏப்.11: இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கான 'பாரதி பாஷா' விருது எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
செப்.24: தமிழக அரசின் சார்பில் 2021, 2022, 2023க்கான கலை மாமணி விருதுகள் அறிவிப்பு. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது.
நவ. 28: கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்கர் அங்கீகாரம்
மார்ச் 3: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் சிறந்த ஹாலிவுட் படங்களுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது.
( அதிக விருது (5) 'அனோரா' - (சிறந்த படம், இயக்குநர் (ஷான் பேக்கர்), நடிகை (மிக்கி மேடிசன்), திரைக்கதை, படத்தொகுப்பு)
* நடிகர் - அட்ரியன் பிராடி (தி புரூடலிஸ்ட்)
* துணை நடிகர் - கிரென் கல்கின் (எ ரியல் பெய்ன்)
* துணை நடிகை - ஜோ ஜால்டனா (எமிலியா பெரெஜ்)
* ஆவணப்படம் - நோ அதர்லேண்ட் (இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை பற்றியது)
* வெளிநாட்டு படம் - ஐயாம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
ஞானபீட விருது
சிறந்த இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஞானபீட விருது (2024) - சத்தீஸ்கரின் ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனை
செப். 23: சினிமாவில் வாழ்நாள் பங்களிப்பிற்கான மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை (2023) மலையாள நடிகர் மோகன்லால் வென்றார்.
சாகித்ய அகாடமி
மொழி பெயர்ப்பு (தமிழ்)
நெல்லை பேராசிரியர் விமலா - 'என்ட ஆணுங்கள்' மலையாள நுாலை தமிழில் மொழி பெயர்த்தார்.
பால புரஸ்கார் (தமிழ்)
விஷ்ணுபுரம் சரவணன் 'ஒற்றை சிறகு ஓவியா' நுால்
புக்கர் கவுரவம்
மே 21: இலக்கியத்துக்கு வழங்கப்படும் சர்வதேச புக்கர் விருது எழுத்தாளர் பானு முஷ்டாகின் 'ஹசீனா, அதர் ஸ்டோரிஸ்' கன்னட புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி 'ஹார்ட் லேம்ப்' என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருக்கும் விருது வழங்கப்பட்டது.
நோபல் பரிசு
அக்.6 - 13: நோபல் பரிசு ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
மருத்துவம்
அக்.6: மேரி பிரான்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் (அமெரிக்கா), ஷிமோன் சகாகுச்சி (ஜப்பான்)
ஆய்வு: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, 'டி செல்' எனும் சொந்த செல்களை தாக்காமல் தடுக்கும் முறையை கண்டுபிடித்தது.
இயற்பியல்
அக்.7: ஜான் கிளார்க், மைக்கேல் டேவோரெட், ஜான் மார்ட்டினிஸ் (அமெரிக்கா)
ஆய்வு : குவாண்டம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி
வேதியியல்
அக்.8: ரிச்சர்ட் ராப்சன் - ஆஸ்திரேலியா, சுசுமு கிட்டகாவா - ஜப்பான், ஓமர்யாகி - அமெரிக்கா
ஆய்வு : 'மெட்டல் - ஆர்கானிக் பிரேம்வொர்க்ஸ்' என்ற புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியது.
இலக்கியம்
அக்.9: லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (ஹங்கேரி)
நுால்: 'ஹெர்ஷ்ட் 07769' என்ற ஜெர்மன் மொழி நாவல்
அமைதி
அக்.10: மரியா கொரினா மச்சோடா. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை ஊக்குவிப்பதற்காக போராடினார். இவ்விருதை எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஏமாற்றம்.
பொருளாதாரம்
அக்.13: பிலிப் அகியான் (பிரிட்டன்), ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் (அமெரிக்கா)
ஆய்வு: புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு

