sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

/

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஆக.1: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை. மேல்முறையீட்டு வழக்கில் இம்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர் சி.வி.சண்முகத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது.

ஆக.9: பா.ம.க., தலைவராக 2026 ஆக., வரை அன்புமணியே தொடர்வார் என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆக.12: முதியோர், மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுகளுக்கே அரிசி, உள்ளிட்ட ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டம் துவக்கம்.

ஆக.13: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., மனோஜ் பாண்டியன், தி.மு.க., வில் சேர்ந்தார்.

ஆக.19: முன்னாள் ராணுவத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் துவக்கம்.

ஆக.21: மதுரையில் விஜயின் த.வெ.க., கட்சியின் இரண்டாவது மாநாடு நடந்தது.

ஆக.26: நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்.

* தமிழக அரசு சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.

ஆக.31: டி.ஜி.பி.,யாக (பொறுப்பு) வெங்கடராமன் பதவியேற்பு.



இந்தியா


ஆக.2: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது கர்நாடகா சிறப்பு நீதிமன்றம்.

ஆக.5: காஷ்மீரில் அருந்ததி ராய், சுமந்த்ரா போஸ் புத்தகங்கள் விற்பனைக்கு தடை

ஆக.7: கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களில் மோசடி செய்து பா.ஜ., வெற்றி பெற்றது என காங்., எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு.

ஆக.8: பீஹார் சீதாமரியில் ரூ. 880 கோடியில் சீதாதேவிக்கு பிரமாண்ட கோயில் கட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல்.

ஆக.9: ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலில் பாகிஸ்தானின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் தெரிவித்தார்.

ஆக.10: 'ஏர் இந்தியா' விமானிகளின் ஓய்வு வயது 58ல் இருந்து 65 ஆக அதிகரிப்பு.

ஆக.14: ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் மாவட்டத்தில் கனமழை, நிலச்சரிவு. 65 பேர் பலி.

ஆக.15: நீண்டநேரம் (103 நிமிடம்) சுதந்திர தின உரை நிகழ்த்திய பிரதமரானார் மோடி. தனது முந்தைய சாதனையை (98 நிமிடம், 2024ல்) முறியடித்தார்.

ஆக.20: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது, சக்ரியா ராஜேஷ் என்பவர் தாக்குதல்.

* 'ஆன்லைன்' விளையாட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்.

* பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கைதான 31 நாளில் தானாக பதவி இழக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்

* யூனியன் பிரதேசங்கள் நிர்வாக திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா தாக்கல்.

ஆக.23: தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை. ரேபிஸ் தாக்கிய நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* சட்டவிரோத ஆன்லைன், ஆப்லைன் சூதாட்ட வழக்கில் காங்., எம்.எல்.ஏ., வீரேந்திரா கைது. ரூ. 6 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ. 12 கோடி பறிமுதல்.

ஆக.25: பஞ்சாப் கவர்னர் அஜய் குமார் பல்லா, கூடுதலாக நாகாலாந்து கவர்னர் பொறுப்பை ஏற்றார்.

ஆக.26: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை அளிக்க மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* கப்பல் படையில் ஐ.என்.எஸ்., உதயகிரி, ஐ.என்.எஸ்., ஹிம்கிரி போர்க்கப்பல்கள் சேர்ப்பு.

உலகம்

ஆக.3: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிரஷென்னிகோவ் எரிமலை, 600 ஆண்டுக்குப்பின் வெடித்தது.

ஆக.4: ஏமனில் ஆப்ரிக்க அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது. 68 பேர் பலி.

ஆக.14: இந்தியா - சீனா இடையே 2020க்குப்பின் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

ஆக.15: இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் சியாட்டில் நகரின் முக்கிய சின்னமான 605 அடி உயர 'ஸ்பேஸ் நீடில்' மீது முதன்முறையாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

ஆக.30: ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா - பிரதமர் மோடி சந்திப்பு.

மேகம்... சோகம்

ஆக.6: உத்தரகாண்டின் தாராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு. 100 பேர் பலி.

'சோலார்' புதுமை

ஆக. 19: இந்தியாவில் முதன்முறையாக வாரணாசி ரயில் நிலைய தண்டவாளத்தில் (70 மீட்டர் நீளம்) 'சோலார்' பேனல்கள் பொருத்தப்பட்டன.

அழகின் அழகே

ஆக.19: 'மிஸ் யுனிவர்ஸ்' (இந்திய அழகி) பட்டம் வென்றார் ராஜஸ்தானின் மனிகா.

ஓட்டு திருட்டு புகார்

ஆக. 17: ஓட்டுகளை பா.ஜ., திருடுவதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார். இதை வலியுறுத்தி பீஹாரில் யாத்திரை நடத்தினார்.

டாப் 4

* ஆக. 25: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) முதன்முறையாக பெண் கமாண்டோ பிரிவு அறிமுகம்.

* ஆக. 29: இந்தியாவில் முதன்முறையாக பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை (2024- 2025) ஒரு கோடியை தாண்டியது

* ஆக. 31: காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுக்குப்பின் திறப்பு.

* ஆக. 31: சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு.






      Dinamalar
      Follow us